Meaning In Tamil Logo

சொற்றொடர் மற்றும் உட்பிரிவு (The Phrase and the Clause)

The Phrase (சொற்றொடர்)

வாக்கியத்தில் உள்ள சில வார்த்தைகளின் தொகுப்பு ஒரு அர்த்தத்தைத் தரும், ஆனால் முழுமையான அர்த்தத்தைத் தராது. மேலும், இதில் Subject மற்றும் Verb இருக்காது. இதனை Phrase (சொற்றொடர்) என்கிறோம்.

உதாரணங்கள்:

  • The sun rises in the east. (இதில் “in the east” என்பது Phrase. இதற்கு “கிழக்கில்” என்று அர்த்தம் உண்டு, ஆனால் முழுமையான வாக்கியம் இல்லை).
  • Humpty Dumpty sat on a wall.

The Clause (உட்பிரிவு / துணை வாக்கியம்)

ஒரு பெரிய வாக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்து, தனக்கென ஒரு Subject (எழுவாய்) மற்றும் Predicate/Verb (பயனிலை) கொண்டுள்ள வார்த்தைகளின் தொகுப்பை Clause என்கிறோம்.

உதாரணங்கள்:

  • He has a chain which is made of gold. (இதில் “He has a chain” என்பது ஒரு Clause. “which is made of gold” என்பது மற்றொரு Clause. இரண்டிலும் Subject மற்றும் Verb உள்ளது).
  • I think that you have made a mistake.