Spelling Rules
ஆங்கிலத்தில் எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க சில அடிப்படை விதிகள் உள்ளன:
- i before e (except after c): “c” என்ற எழுத்துக்குப் பின் வரும்போது “ei” என வரும். மற்ற இடங்களில் “ie” என வரும்.
எ.கா: Believe, Relieve (ஆனால் Receive, Deceive). - Dropping Silent ‘e’: ஒரு வார்த்தை “e”-ல் முடிந்து, அதனுடன் “ing” அல்லது “ed” சேர்க்கும்போது “e” நீக்கப்படும்.
எ.கா: Hope + ing = Hoping / Drive + ing = Driving. - Doubling Consonants: ஒரு குறுகிய உயிர் எழுத்துக்குப் பின் வரும் மெய் எழுத்துடன் “ing/ed” சேர்க்கும்போது அந்த மெய் எழுத்து இரட்டிப்பாகும்.
எ.கா: Run + ing = Running / Beg + ed = Begged.