Meaning In Tamil Logo

காலங்கள்: ஓர் அறிமுகம் (Introduction to Tenses)

Tense (காலம்) என்றால் என்ன?

ஒரு செயல் எப்பொழுது நடந்தது, நடக்கிறது, அல்லது நடக்கப்போகிறது என்பதைக் குறிக்க வினைச்சொல்லின் (Verb) வடிவம் மாறுபடுவதை Tense என்கிறோம்.

முக்கியமாக 3 காலங்கள் உள்ளன:

  1. Present Tense (நிகழ்காலம்): தற்போது நடக்கும் ஒரு செயலைக் குறிப்பது.
    எ.கா: I write this letter. (நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்).
  2. Past Tense (இறந்தகாலம்): நடந்து முடிந்த ஒரு செயலைக் குறிப்பது.
    எ.கா: I wrote this letter yesterday. (நான் இந்தக் கடிதத்தை நேற்று எழுதினேன்).
  3. Future Tense (எதிர்காலம்): இனிமேல் நடக்கப்போகும் ஒரு செயலைக் குறிப்பது.
    எ.கா: I shall write another letter tomorrow. (நான் நாளை வேறொரு கடிதம் எழுதுவேன்).

இந்த 3 காலங்களும் ஒவ்வொன்றும் 4 உட்பிரிவுகளைக் (Sub-divisions) கொண்டுள்ளன. அதாவது Simple, Continuous, Perfect, Perfect Continuous என மொத்தம் 12 Tenses உள்ளன. இவற்றை அடுத்தடுத்த பாடங்களில் ஒவ்வொன்றாக விரிவாகப் படிப்போம்.