Adjective Clause
வாக்கியத்தில் ஒரு பெயருரிச்சொல் (Adjective) செய்யும் வேலையைச் செய்யும் துணை வாக்கியமே Adjective Clause ஆகும். இது தனக்கு முன்னால் வரும் Noun-ஐ விவரிக்கும்.
உதாரணங்கள்:
- The umbrella which has a broken handle is mine. (உடைந்த கைப்பிடி கொண்ட அந்த குடை என்னுடையது).
- This is the place where he was born. (அவர் பிறந்த இடம் இதுதான்).