Meaning In Tamil Logo

பெயருரிச்சொல் என்றால் என்ன? (Introduction to Adjectives)

Adjective (பெயருரிச்சொல்)

ஒரு பெயர்ச்சொல்லின் (Noun) அர்த்தத்தோடு மேலும் சில தகவல்களைச் சேர்க்கப் பயன்படும் வார்த்தையே Adjective (பெயருரிச்சொல்) எனப்படும். எளிமையாகச் சொன்னால், Noun-ஐ வர்ணிக்கும் சொல்.

உதாரணங்கள்:

  • Sita is a clever girl. (சீதா ஒரு புத்திசாலிப் பெண். இங்கே girl என்ற பெயர்ச்சொல்லை clever என்ற சொல் வர்ணிக்கிறது.)
  • He gave me five mangoes. (அவன் எனக்கு ஐந்து மாம்பழங்களை கொடுத்தான். இங்கே mangoes என்ற பெயர்ச்சொல்லின் எண்ணிக்கையை five என்ற சொல் குறிக்கிறது.)

அடுத்த பாடத்தில் Adjective-ன் பல்வேறு வகைகளைப் (Kinds of Adjectives) பற்றி விரிவாகக் காண்போம்.