Lie vs Lay: “Lie” என்பது படுப்பதைக் குறிக்கும் (தானாகச் செய்வது). “Lay” என்பது ஒன்றை வைப்பதைக் குறிக்கும் (பிறருக்குச் செய்வது). எ.கா: I lie down. / Lay the book on the table.
Hang: ஒரு பொருளைத் தூக்கிலிட்டால் “Hung” (V3). ஒரு மனிதனைத் தூக்கிலிட்டால் “Hanged” (V3). எ.கா: The picture was hung. / The murderer was hanged.
Since vs For: காலப் புள்ளியைக் குறிக்க (Point of time) “Since”, கால அளவைக் குறிக்க (Period of time) “For” பயன்படும். எ.கா: Since 2010. / For five years.