Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) என்றால் என்ன?
ஒரு பெயர்ச்சொல்லுக்குப் (Noun) பதிலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை Pronoun எனப்படும். ஒருவரின் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்வதைத் தவிர்க்க இது பயன்படுகிறது.
எ.கா: Hari is absent, because he is ill. (இங்கே he என்பது Pronoun).
Personal Pronouns (இடப் பெயர்கள்)
நபர்களைக் குறிக்கும் Pronouns மூன்று இடங்களாகப் (Persons) பிரிக்கப்பட்டுள்ளன:
- First Person (தன்மை): பேசுபவரைக் குறிப்பது.
எ.கா: I (நான்), We (நாங்கள்/நாம்), Me (என்னை), Us (எங்களை). - Second Person (முன்னிலை): யாரிடம் பேசுகிறோமோ அவரைக் குறிப்பது.
எ.கா: You (நீ, நீங்கள்). - Third Person (படர்க்கை): யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி பேசுகிறோமோ அதைக் குறிப்பது.
எ.கா: He (அவன்), She (அவள்), It (அது), They (அவர்கள்/அவைகள்), Him, Her, Them.
அடுத்த பாடத்தில் இதன் மற்ற வகையான Reflexive, Demonstrative மற்றும் Relative Pronouns பற்றித் தெளிவாகக் காண்போம்.