குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென்
"Restrain anger where anger will be effective; where it won’t be,
does it matter whether one restrains it or not?"
தமிழ் தெளிவுரை
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?
English Meaning
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein?
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?