Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 471
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல்
"Assess before an action, the strengths of the task, self, opponents and companions."
தமிழ் தெளிவுரை
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
English Meaning
The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.
Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 472
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில்
"Know what is achievable, gain requisite knowledge, and stay focussed : nothing is impossible."
தமிழ் தெளிவுரை
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
English Meaning
Who know what can be wrought, with knowledge of the means, on this,
Their mind firm set, go forth, nought goes with them amiss.
There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்
"Many have boken down midway, having started with fervour without assessing their capabilities."
தமிழ் தெளிவுரை
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
English Meaning
Ill-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven.
There are many who, ignoran t of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்
"One who neither collaborates nor knows his capabilities, but, is narcissistic, is slated to fail fast."
தமிழ் தெளிவுரை
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
English Meaning
Who not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes.
He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்
"A cart, though laden with only peacock feathers, may yet have its axle broken, when overloaded."
தமிழ் தெளிவுரை
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்
English Meaning
With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain.
The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்
"Having climbed to the tip of a branch, striving to go further, will be fatal."
தமிழ் தெளிவுரை
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
English Meaning
Who daring climbs, and would himself upraise
Beyond the branch's tip, with life the forfeit pays.
There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 477
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் போற்றி வழங்கு நெறி
"Do charity, but within your means; that is the way to utilize, and protect, wealth."
தமிழ் தெளிவுரை
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.
English Meaning
With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live.
Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 478
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை
"Though revenues are limited, no harm – if you don’t let expenses exceed them."
தமிழ் தெளிவுரை
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
English Meaning
Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.
Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்
"A life lived beyond one’s means, will look glitzy but will lose its sheen and give way to gloom."
தமிழ் தெளிவுரை
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்
English Meaning
Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.
பொருட்பால் • அரசியல் • வலியறிதல்
குறள் 480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்
"Generosity beyond the limits of one’s resources, is bound to cease soon, after exhausting the resources."
தமிழ் தெளிவுரை
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
English Meaning
Beneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans.
The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.