Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 221
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து
"Giving to the poor is charity; all else have the quality of anticipating a return."
தமிழ் தெளிவுரை
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது
English Meaning
Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 222
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று
"To receive is a vice, even if it is accepted as a good virtue; to give, is good, even if the heaven is denied."
தமிழ் தெளிவுரை
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
English Meaning
Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள
"Charity, without mention of the distress of poverty, is present only in those from a good family."
தமிழ் தெளிவுரை
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பத
English Meaning
I've nought' is ne'er the high-born man's reply;
He gives to those who raise themselves that cry.
(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth.
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 224
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு
"To be asked to give is bitter too, until seeing the smiling face of the recipient."
தமிழ் தெளிவுரை
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
English Meaning
The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 225
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்
"The strength of the strongest is to endure hunger; it trails the ability to eradicate that hunger."
தமிழ் தெளிவுரை
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
English Meaning
Mid devotees they're great who hunger's pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain.
The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி
"To douse the destructive hunger of the destitute, is the safe to store the riches of the rich."
தமிழ் தெளிவுரை
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
English Meaning
Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது
"Hunger, the deadly disease, never touches one who is accustomed to share his food with others."
தமிழ் தெளிவுரை
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
English Meaning
Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்
"Do they not know to enjoy the joy of giving, those loveless people, who keep their wealth only to lose it."
தமிழ் தெளிவுரை
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.
English Meaning
Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்
"Eating alone to increase one’s accumulated wealth, is more distressing than begging."
தமிழ் தெளிவுரை
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது
English Meaning
They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.
அறத்துப்பால் • இல்லறவியல் • ஈகை
குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை
"There is nothing more harrowing than death; that too seems sweet, if one is unable to give a thing to the needy."
தமிழ் தெளிவுரை
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
English Meaning
Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.