குறள் 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்
"Wisdom is the shield against suffering; and the fortress,
impregnable and indestructible for the foes."
தமிழ் தெளிவுரை
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
English Meaning
True wisdom wards off woes, A circling fortress high;Its inner strength man's eager foes Unshaken will defy.
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.