Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 431
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து
"Those who lack arrogance, wrath and pettiness: wealth, in their hands, assumes dignity."
தமிழ் தெளிவுரை
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
English Meaning
Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு
"Avarice, ignominious pride, and repulsive gloating, are fatal flaws in a leader."
தமிழ் தெளிவுரை
பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
English Meaning
A niggard hand, o'erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith.
Avarice, undignified pride, and low pleasures are faults in a king.
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்
"For those who fear disgrace, their faults, though grain-sized, woud seem gigantic."
தமிழ் தெளிவுரை
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
English Meaning
Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace 'twill seem.
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை
"Fend off your own flaws; those flaws are your fatal foes."
தமிழ் தெளிவுரை
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
English Meaning
Freedom from faults is wealth; watch heedfully
'Gainst these, for fault is fatal enmity.
Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்
"Having no safeguards before the onset of trouble, will make our lives, dry straws before a raging fire."
தமிழ் தெளிவுரை
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
English Meaning
His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.
The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 436
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு
"What flaw could fall upon a leader who rectifies his faults before observing and assailing others’ faults."
தமிழ் தெளிவுரை
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்
English Meaning
Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்
"The wealth of one who, out of pettiness, doesn’t do what ought to done, will vanish without growth."
தமிழ் தெளிவுரை
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
English Meaning
Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.
The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 438
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று
"Clinging to wealth, out of avarice, is worse than the any other flaw."
தமிழ் தெளிவுரை
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
English Meaning
The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 439
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை
"Never give in to egotism; never indulge in vain acts that benefit none."
தமிழ் தெளிவுரை
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது
English Meaning
Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good.
Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.
பொருட்பால் • அரசியல் • குற்றங்கடிதல்
குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்
"Those who enjoys what they enjoy, unknown to foes, are difficult to defeat."
தமிழ் தெளிவுரை
தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
English Meaning
If, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove.
If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.