Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 111
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின்
"Neutrality is a great virtue when one practices impartiality, unfailingly, towards all sections. (Foes, friends, strangers)"
தமிழ் தெளிவுரை
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
English Meaning
If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain.
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து
"The wealth of one who has a balanced view, will remain intact and will last for the next generations."
தமிழ் தெளிவுரை
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
English Meaning
The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்
"Even if some good comes out of the gains generated by being unfair, desist from making that gain."
தமிழ் தெளிவுரை
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
English Meaning
Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain!
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 114
தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்
"Whether a person has been just or unjust in life, will be ascertained by the nature of offsprings left behind."
தமிழ் தெளிவுரை
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்
English Meaning
Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear.
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி
"Ups and downs in life are inevitable; noble scholars are embellished by not letting their hearts vacillate in either case."
தமிழ் தெளிவுரை
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
English Meaning
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 116
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்
"When the heart falters to think unfairly, be alerted that you are on course for ruination."
தமிழ் தெளிவுரை
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்
English Meaning
If, right deserting, heart to evil turn,
Let man impending ruin's sign discern!
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 117
கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
"The world will not think ill of one who has stumbled into poverty because of being fair and righteous."
தமிழ் தெளிவுரை
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
English Meaning
The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி
"Like a weighing scale that is balanced and sways correctly, the grace of noble scholars lies in dispassionate assessment."
தமிழ் தெளிவுரை
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்
English Meaning
To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages' praise.
To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்
"It is righteous to speak words that are not deviant; such words are a result of unbiased thoughts that are not deviant."
தமிழ் தெளிவுரை
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
English Meaning
Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.
F reedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
அறத்துப்பால் • இல்லறவியல் • நடுவுநிலைமை
குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்
"Responsible business is when a business-person, caringly, deploys other people’s money as one’s own."
தமிழ் தெளிவுரை
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.
English Meaning
As thriving trader is the trader known,
Who guards another's interests as his own.
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.