Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 241
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள
"The gains of compassion are most precious; material wealth is possessed even by the despicable."
தமிழ் தெளிவுரை
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
English Meaning
Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 242
நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை
"Pursue the virtuous path and have compassion; all spiritual quests lead to this companion."
தமிழ் தெளிவுரை
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
English Meaning
The law of 'grace' fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.
(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்
"Those with their hearts filled with compassion will never enter a woeful world of darkness."
தமிழ் தெளிவுரை
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
English Meaning
They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 244
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை
"The compassionate, who care for all other lives, do not fear for their own lives."
தமிழ் தெளிவுரை
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை
English Meaning
Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 245
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி
"The fertile world which endows us with breathing air illustrates that there is no sorrow for the compassionate."
தமிழ் தெளிவுரை
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
English Meaning
The teeming earth's vast realm, round which the wild winds blow,
Is witness, men of ' grace' no woeful want shall know.
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்
"Those who do evil, abandoning compassion, must have forsaken and forgotten the meaning of life."
தமிழ் தெளிவுரை
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
English Meaning
Gain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do.
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 247
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு
"The poor do not possess this world; likewise, the uncompassionate do not inhabit the other world."
தமிழ் தெளிவுரை
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
English Meaning
As to impoverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot.
As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 248
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது
"Those who lack wealth may, one day, bloom; those who lack compassion are incorrigible, and are forever, doomed."
தமிழ் தெளிவுரை
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
English Meaning
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose 'benevolence', lose all; nothing can change their doom.
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்
"The uncompassionate doing a righteous deed is like the unwise finding true enlightenment."
தமிழ் தெளிவுரை
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
English Meaning
When souls unwise true wisdom's mystic vision see,
The 'graceless' man may work true works of charity.
If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
அறத்துப்பால் • துறவறவியல் • அருளுடைமை
குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து
"When you confront those meeker than you, think of yourself in front of a stronger person."
தமிழ் தெளிவுரை
அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
English Meaning
When weaker men you front with threat'ning brow,
Think how you felt in presence of some stronger foe.
When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.