Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1051
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று
"Seeks alms if you find those worthy of benefaction; If they refuse, blame is theirs and not yours."
தமிழ் தெளிவுரை
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
English Meaning
When those you find from whom 'tis meet to ask,- for aid apply;
Theirs is the sin, not yours, if they the gift deny.
If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1052
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்
"Seeking alms causes us great delight If what is sought is got without any plight."
தமிழ் தெளிவுரை
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
English Meaning
Even to ask an alms may pleasure give,
If what you ask without annoyance you receive.
Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1053
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோர் ஏஎர் உடைத்து
"With ungrudging hearts, they view charity as a duty To stand before them and beg – there’s a beauty!"
தமிழ் தெளிவுரை
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
English Meaning
The men who nought deny, but know what's due, before their face
To stand as suppliants affords especial grace.
There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு
"They know not withholding even in their dreams Same as giving it seems, asking them for alms."
தமிழ் தெளிவுரை
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
English Meaning
Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream.
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1055
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது
"That the world has them who give and nothing conceal Is why others appear before them and for alms appeal."
தமிழ் தெளிவுரை
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
English Meaning
Because on earth the men exist, who never say them nay,
Men bear to stand before their eyes for help to pray.
As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும்
"When we see those without the folly of concealing Gone are all the ills of having nothing."
தமிழ் தெளிவுரை
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
English Meaning
It those you find from evil of 'denial' free,
At once all plague of poverty will flee.
All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1057
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து
"Seeing givers who do not mock and deride The heart delights and rejoices deep inside."
தமிழ் தெளிவுரை
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
English Meaning
If men are found who give and no harsh words of scorn employ,
The minds of askers, through and through, will thrill with joy.
Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1058
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று
"If there be no mendicants, this vast moist world Will resemble wooden puppets that come and go."
தமிழ் தெளிவுரை
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
English Meaning
If askers cease, the mighty earth, where cooling fountains flow,
Will be a stage where wooden puppets come and go.
If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை
"Ah, what is there to brag about those who give If there be none to seek and gladly receive."
தமிழ் தெளிவுரை
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.
English Meaning
What glory will there be to men of generous soul,
When none are found to love the askers' role?
What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).
பொருட்பால் • ஒழிப்பியல் • இரவு
குறள் 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி
"The denied mendicant should never feel indignant The pain of poverty is proof enough of its worth."
தமிழ் தெளிவுரை
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
English Meaning
Askers refused from wrath must stand aloof;
The plague of poverty itself is ample proof.
He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.