Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
"Like the earth that bears even those who till it, supreme virtue is to be patient with one’s deriders."
தமிழ் தெளிவுரை
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
English Meaning
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 152
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று
"One should always tolerate a transgression; it is even better to forget it."
தமிழ் தெளிவுரை
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
English Meaning
Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 153
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
"Turning away a guest is the most abject poverty; enduring the excesses of a moron is the mightiest might."
தமிழ் தெளிவுரை
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
English Meaning
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்
"If you want to lead an unabated fulfilling life, you have to preserve and practice forbearance."
தமிழ் தெளிவுரை
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
English Meaning
Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain.
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 155
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
"One who retaliates is not held in high regard; one who is patient is precious as gold."
தமிழ் தெளிவுரை
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
English Meaning
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 156
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்
"Those who retaliate rarely rejoice for a day; the repute of the patient remains till the end of the world."
தமிழ் தெளிவுரை
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு
English Meaning
Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.
The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று
"Even if an untoward evil is done unto you, it is better not to resent and do an unrighteous deed."
தமிழ் தெளிவுரை
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
English Meaning
Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல்
"Defeat a person who has, out of arrogance, done you harm, by your forbearance."
தமிழ் தெளிவுரை
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
English Meaning
With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Let a man by patience overcome those who through pride commit excesses.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 159
துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்
"One who, patiently, bears the harsh words of a transgressor, is purer than a puritan."
தமிழ் தெளிவுரை
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
English Meaning
They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure.
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
அறத்துப்பால் • இல்லறவியல் • பொறையுடைமை
குறள் 160
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு
"Great ascetics who conquer hunger, by fasting, are inferior to those who patiently endure the harsh words of others."
தமிழ் தெளிவுரை
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
English Meaning
Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.