Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 291
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்
"Truth is defined as speaking words that cause no harm."
தமிழ் தெளிவுரை
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
English Meaning
You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 292
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்
"Even a lie will be placed on par with the truth, if it yields unblemished benefits."
தமிழ் தெளிவுரை
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
English Meaning
Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்
"Do not lie consciously; once you lie so, your own conscience will sear you."
தமிழ் தெளிவுரை
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
English Meaning
Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்
"One who, guided by his heart, lives without lies, will forever live in the hearts of all."
தமிழ் தெளிவுரை
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
English Meaning
True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை
"One who tells the truth, with all his heart, is ahead of those who do penance and charity"
தமிழ் தெளிவுரை
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்
English Meaning
Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 296
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்
"No other fame equals not lying; without any physical strain it yields all virtues."
தமிழ் தெளிவுரை
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
English Meaning
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று
"Not lying, not lying, if practiced, makes it acceptable not to do, not to do other righteous deeds."
தமிழ் தெளிவுரை
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
English Meaning
If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 298
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்
"Water ensures cleanliness externally; truthfulness makes inner purity evident."
தமிழ் தெளிவுரை
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
English Meaning
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.
Purity of body is produced by water and purity of mind by truthfulness.
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
"All light is not light; for noble scholars, truthfulness is the true light of enlightenment."
தமிழ் தெளிவுரை
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
English Meaning
Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright.
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
அறத்துப்பால் • துறவறவியல் • வாய்மை
குறள் 300
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற
"Of all the known truths, there is nothing more significant than truthfulness."
தமிழ் தெளிவுரை
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
English Meaning
Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare.
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.