Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்
"What is a righteous deed? Not killing. Killing leads to everything evil."
தமிழ் தெளிவுரை
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
English Meaning
What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill.
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 322
பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை
"Sharing food and taking care of all lives, is the foremost amongst all virtues compiled in all scriptures."
தமிழ் தெளிவுரை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
English Meaning
Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று
"Not killing is the foremost virtue; it is good to follow that up with not lying."
தமிழ் தெளிவுரை
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
English Meaning
Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 324
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழும் நெறி
"What is a perfect path? It is the pursuit of the principle of not slaying any being."
தமிழ் தெளிவுரை
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
English Meaning
You ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay.
Good path is that which considers how it may avoid killing any creature.
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 325
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை
"Of all those who, despising material existence, have embraced renunciation, the foremost are those who fear and shun killing."
தமிழ் தெளிவுரை
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
English Meaning
Of those who 'being' dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.
Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லா துயிருண்ணுங் கூற்று
"Death dares not trample on the life of one who abides by the principle of not killing any life."
தமிழ் தெளிவுரை
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
English Meaning
Ev'n death that life devours, their happy days shall spare,
Who law, 'Thou shall not kill', uphold with reverent care.
Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 327
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை
"Even if one were to sacrifice one’s own life, do not commit the act of taking another life."
தமிழ் தெளிவுரை
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
English Meaning
Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.
Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை
"Even if great wealth leads to great benefits, great men loathe wealth obtained by sacrifice of lives."
தமிழ் தெளிவுரை
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
English Meaning
Though great the gain of good should seem, the wise
Will any gain by staughter won despise.
The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து
"For those who can see the folly of it, the savage imbeciles in any profession involving killing are doing a despicable job."
தமிழ் தெளிவுரை
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்
English Meaning
Whose trade is 'killing', always vile they show,
To minds of them who what is vileness know.
Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.
அறத்துப்பால் • துறவறவியல் • கொல்லா மை
குறள் 330
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்
"Those with a rotting sickly body and a rotten life mired in poverty, must have killed other beings before."
தமிழ் தெளிவுரை
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
English Meaning
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.