Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 481
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது
"A crow will defeat an owl during the day; a king needs to pick the right time to defeat his foes."
தமிழ் தெளிவுரை
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
English Meaning
A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.
A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 482
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு
"Doing the right things at the right time, is the rope which binds the wealth, making it boundless."
தமிழ் தெளிவுரை
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
English Meaning
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியாற் கால மறிந்து செயின்
"Does an impossible task exist, when the right resources and strategy are deployed at the right time?"
தமிழ் தெளிவுரை
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
English Meaning
Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 484
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்
"Desire the world, you may, and it will be yours, if, for your actions, you choose the right time and place."
தமிழ் தெளிவுரை
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
English Meaning
The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 485
காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர்
"They will await the opportune moment – they, who determinedly desire the world."
தமிழ் தெளிவுரை
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
English Meaning
Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து
"The ardent and the mighty too can stay subdued like a rampant ram that withdraws before it pounces."
தமிழ் தெளிவுரை
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
English Meaning
The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress.
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
"The wise will not break into an external rage instantly; they will keep their anger suppressed, biding their time."
தமிழ் தெளிவுரை
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
English Meaning
The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 488
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை காணிற் கிழக்காந் தலை
"Bear with your foes; when the time is ripe, turn things around."
தமிழ் தெளிவுரை
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
English Meaning
If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily b rought low.
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 489
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்
"When the rarest of moments comes about, grab it to accomplish the toughest of tasks."
தமிழ் தெளிவுரை
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
English Meaning
When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
பொருட்பால் • அரசியல் • காலமறிதல்
குறள் 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து
"Like a heron, be still when the time is not ripe, and spear the prey when it is near."
தமிழ் தெளிவுரை
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். சாலமன் பாப்பையா விளக்க உரை:
English Meaning
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.