Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1291
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது
"You see, his heart is his alone; Why not my heart be all my own?"
தமிழ் தெளிவுரை
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
English Meaning
You see his heart is his alone
O heart, why not be all my own?
O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
"O heart, you see how he slights me Yet you clasp him as if friendly."
தமிழ் தெளிவுரை
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?
English Meaning
Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy?
O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1293
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல்
"You follow him at will. Is it "The fallen have no friends" my heart?"
தமிழ் தெளிவுரை
நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?
English Meaning
The ruined have no friends, 'they say; and so, my heart,
To follow him, at thy desire, from me thou dost depart.
O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1294
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று
"You won't sulk first and then submit Who will then consult you, my heart?"
தமிழ் தெளிவுரை
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
English Meaning
See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart?
O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1295
பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு
"Frets to gain and fears loss in gain O my heart suffers ceaseless pain."
தமிழ் தெளிவுரை
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
English Meaning
I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.
My soul fears when it is without him; it also fears when it is with him; it is sub ject to incessant sorrow.
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு
"My itching mind eats me anon As I muse on him all alone."
தமிழ் தெளிவுரை
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
English Meaning
My heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan.
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு
"forget shame but not his thought In mean foolish mind I'm caught."
தமிழ் தெளிவுரை
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.
English Meaning
Fall'n 'neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1298
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு
"My heart living in love of him Hails his glory ignoring blame."
தமிழ் தெளிவுரை
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?
English Meaning
If I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o'er.
My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1299
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி
"Who support a man in grief If lover's heart denies relief?"
தமிழ் தெளிவுரை
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
English Meaning
And who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief?
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?
இன்பத்துப்பால் • கற்பியல் • நெஞ்சொடுபுலத்தல்
குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி
"Why wonder if strangers disown When one's own heart is not his own?"
தமிழ் தெளிவுரை
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
English Meaning
A trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own!
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.