Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது
"Love is sweeter than wine; for vast Is its delight at very thought."
தமிழ் தெளிவுரை
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
English Meaning
From thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings.
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1202
எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில்
"Pains are off at the lover's thought In all aspects this love is sweet."
தமிழ் தெளிவுரை
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
English Meaning
How great is love! Behold its sweetness past belief!
Think on the lover, and the spirit knows no grief.
Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்
"To sneeze I tried hence but could not Me he tried to think but did not."
தமிழ் தெளிவுரை
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?
English Meaning
A fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray?
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ உளரே அவர்
"Have I a place within his heart? Ah from mine he will never depart."
தமிழ் தெளிவுரை
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
English Meaning
Have I a place within his heart!
From mine, alas! he never doth depart.
He continues to abide in my soul, do I likewise abide in his ?
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1205
தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல்
"Shame! My heart often he enters Banning me entry into his."
தமிழ் தெளிவுரை
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
English Meaning
Me from his heart he jealously excludes:
Hath he no shame who ceaseless on my heart intrudes?
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்
"Beyond the thought of life with him What else of life can I presume?"
தமிழ் தெளிவுரை
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
English Meaning
How live I yet? I live to ponder o'er
The days of bliss with him that are no more.
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்
"What will happen if I forget When his memory burns my heart?"
தமிழ் தெளிவுரை
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
English Meaning
If I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget!
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு
"I bring him to ceaseless memory He chides not; and thus honours me."
தமிழ் தெளிவுரை
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
English Meaning
My frequent thought no wrath excites. It is not so?
This honour doth my love on me bestow.
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து
"Dear life ebbs away by thought Of him who said we are one heart."
தமிழ் தெளிவுரை
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
English Meaning
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,
Who said erewhile, 'We're one for evermore'.
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
இன்பத்துப்பால் • கற்பியல் • நினைந்தவர்புலம்பல்
குறள் 1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி
"Hail moon! Set not so that I find Him who left me but not my mind."
தமிழ் தெளிவுரை
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
English Meaning
Set not; so may'st thou prosper, moon! that eyes may see
My love who went away, but ever bides with me.
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.