Meaning In Tamil Logo

திருக்குறள்

1330 குறள்களும் அதன் தெளிவுரை மற்றும் ஆங்கில விளக்கத்துடன்

அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்
"If, without fairness, you desire to usurp the well-earned wealth of others, it will destroy your family, trigger more crimes and result in guilt."
தமிழ் தெளிவுரை
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
English Meaning
With soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்
"Those, who desist being unfair, will not sin, coveting the material benefits of other’s possessions."
தமிழ் தெளிவுரை
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
English Meaning
Through lust of gain, no deeds that retribution bring,
Do they, who shrink with shame from every unjust thing.
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 173
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்
"Craving for the cheap thrills that other’s money can give, one, who seeks TRUE happiness, will not do an unrighteous act."
தமிழ் தெளிவுரை
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
English Meaning
No deeds of ill, misled by base desire,
Do they, whose souls to other joys aspire.
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்
"One who is flawless and wise and has mastered all senses, will never feel ‘I’m poor’ and yearn for other’s wealth"
தமிழ் தெளிவுரை
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.
English Meaning
Men who have conquered sense, with sight from sordid vision freed,
Desire not other's goods, e'en in the hour of sorest need.
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 175
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்
"What is the use of deep wisdom and broad knowledge, if one acts indiscreetly with anyone, coveting his wealth."
தமிழ் தெளிவுரை
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
English Meaning
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 176
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்
"One who seeks to be compassionate and manifests it in virtuous ways, will succumb to destructive thoughts and acts, if he falters and covets others’ possession."
தமிழ் தெளிவுரை
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
English Meaning
Though, grace desiring, he in virtue's way stand strong,
He's lost who wealth desires, and ponders deeds of wrong.
If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்
"Do not covet others’ wealth; on fruition, the consequences are always contemptible."
தமிழ் தெளிவுரை
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
English Meaning
Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired.
Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 178
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்
"How will one’s wealth never shrink? By, not desiring to usurp the wealth of others."
தமிழ் தெளிவுரை
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
English Meaning
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு
"Wealth will find means to bestow itself on those who, knowing the virtue of not coveting others’ property, wisely desist from it."
தமிழ் தெளிவுரை
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
English Meaning
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
அறத்துப்பால் • இல்லறவியல் • வெஃகாமை
குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு
"Coveting others’ wealth injudiciously will result in dire consequences; one who takes pride in not so desiring will meet success."
தமிழ் தெளிவுரை
வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்
English Meaning
From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still.
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திருக்குறள் யாரால் இயற்றப்பட்டது?

திருக்குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்கள் இதில் அடங்கும்.

மாணவர்களுக்குத் திருக்குறள் எவ்வாறு உதவுகிறது?

டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் திருக்குறள் மிகவும் அவசியம். இது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வியல் நெறிகளை அறிய உதவுகிறது.